தீபாவளி நெருங்கும் நிலையில் விடுமுறை நாளான நேற்று திருநெல்வேலியில் உள்ள ஜவுளிக்கடைகளுக்கு குடும்பத்துடன் மக்கள் திரண்டு வந்தனர். டவுன் வடக்கு ரதவீதியில் அலைமோதிய கூட்டம். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional02

தீபாவளி முன்னிட்டு கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பு :

செய்திப்பிரிவு

இந்துக்களின் முக்கிய பண்டிகை களில் ஒன்றான தீபாவளி வரும் 4-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜவுளி, பட்டாசு, இனிப்பு கடைகளில் வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் வியாபாரம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி வரை மழை இல்லை என்றால் பட்டாசு வியாபாரம் விறுவிறுப்படையும்” என்றனர்.

ஆட்சியர் எச்சரிக்கை

உரிமம் பெற்ற பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. பாதுகாப்புக்காக ஈரச் சாக்குகள், தண்ணீர், மணல் வாளிகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். புகைபிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும்.

உதிரி பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. எளிதில் தீப்பற்றும் எண்ணெய், காதிகம், பெயின்ட் போன்றவற்றை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்து வைக்கக் கூடாது.

ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து 04633 290548 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

கோவில்பட்டி

SCROLL FOR NEXT