Regional02

அதிக மரம் வளர்க்கும் ஊராட்சிக்கு பரிசு : கனிமொழி எம்.பி. அறிவிப்பு

செய்திப்பிரிவு

வைகுண்டம் வட்டம் இரட்டை திருப்பதியில் 66 ஊராட்சி தலைவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஊராட்சிகளுக்கு மொத்தம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, “ சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் சுமார் 10,000 மரக்கன்றுகளை வழங்கியுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால், அதிகமான மரங்கள் வளர்க்க வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் எந்த ஊராட்சியில் அதிக மரங்களை நட்டு வளர்க்கிறார்களோ அவர்க ளுக்கு நிச்சயமாக பரிசு தரப்படும்” என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, வைகுண்டம் வட்டாட்சியர் கண்ணன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநர் ஜெயக்குமார், ஊராட்சி தலைவர் களின் கூட்டமைப்பு தலைவர் சிவகாமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT