Regional01

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று டிஎஸ்பி விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டம் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி, சந்தைபேட்டை, பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் நிறை வடைந்தது.

பின்னர், லஞ்சம் வாங்கு வதும், கொடுப்பதும் குற்றம். பொதுமக்கள் அரசு அலுவல கங்களில் கொடுக்கும் பணத்துக் கான ரசீதை கேட்டுப் பெற வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், காவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT