கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயி ஒருவர் பெற்ற கடனுக்கான தள்ளுபடி ரசீதை வழங்கிய எம்எல்ஏ சரவணன். 
Regional02

7,084 விவசாயிகளுக்கு : ரூ.46 கோடி கடன் தள்ளுபடி :

செய்திப்பிரிவு

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேமங்கலம், வீரளூர் உட்பட 8 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 7,084 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கும் விழா நடைபெற்றது.

46 கோடி ரூபாய்க்கான தள்ளுபடி ரசீதை வழங்கி எம்எல்ஏ சரவணன் பேசும்போது, “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த கடன் தள்ளுபடிக்கான ரசீது மற்றும் தங்க நகைகள் வழங்கப்படுகிறது. பயிர்க் கடன் மற்றும் நகைக் கடனை தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதில், ஒன்றிய குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றியச் செயலாளர்கள் சிவகுமார், சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் எழில்மாறன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

SCROLL FOR NEXT