Regional03

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஒவலிப்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (50) கண்மாய் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

இதுகுறித்து நெற்குப்பை போலீஸார் விசாரிக்கின்றனர்.

மகிபாலன்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது காளை மாடு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மாடு இறந்தது.

SCROLL FOR NEXT