பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சைக்கிள் பேரணி சென்றனர். 
Regional01

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சைக்கிள் பேரணி :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்தியமங்கலத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.சுரேந்தர், தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி.நடராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

எஸ்ஆர்டி-யில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய சாலை வழியாகச் சென்று கோட்டுவீரம்பாளையத்தில் முடிவடைந்தது. போராட்டத்தில் ஒரு தள்ளு வண்டியில் காஸ் சிலிண்டர், விறகு சுமை, விறகு அடுப்பு ஆகியவற்றை வைத்து நூதனமான முறையில் பேரணி நடைபெற்றது.

பேரணியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.கே.முருகன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மு.சரவணகுமார், மாதர் சங்க நிர்வாகி கா.மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல் புளியம்பட்டி, பவானி சாகர் ஆகிய இடங்களிலும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT