பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற சைக்கிள், மாட்டுவண்டி பேரணி. 
Regional03

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சைக்கிள் பேரணி :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையேற்றத்தைக் கண்டித்து திரு வாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், திருசசி மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று சைக் கிள் பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையேற்றத்தைக் கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சைக்கிள் மற்றும் மாட்டுவண்டி பேரணி நடைபெற்றது. நாகை எம்.பி எம்.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோட்டூர் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற சைக்கிள், மாட்டுவண்டி பேரணியில் திருத் துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் அம்புஜம், ஒன்றியச் செயலாளர் செந்தில்நாதன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மன்னார்குடியில் நடைபெற்ற பேரணியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் துரை.அருள்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல, திருத்துறைப்பூண்டி யிலும் சைக்கிள் பேரணி நடைபெற் றது.

தஞ்சாவூரில்...

பெரம்பலூரில்...

அரியலூரில்...

புதுக்கோட்டையில்...

கரூரில்...

திருச்சியில்...

SCROLL FOR NEXT