Regional01

விபத்து உயிரிழப்புகளை தடுக்க மின்வாரியம் ஆலோசனை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

வீடுகளில் மின் விபத்து களில் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக கையாளப்படும் பாதுகாப்பு உபகரணங்களில் ஒன்று தான் எம்சிபி (MCB) எனும் கருவி. இக் கருவியை பொருத்தினால் ஈரத்தோடு கிரைண்டரை நகர்த்தும் போதோ, வாளியில் போடும் வாட்டர் ஹீட்டரை, ஸ்விட்ச் ஆப் செய்யாமல் தண்ணீர் சூடாகி விட்டதா என்று பார்க்கும்போதோ ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்கலாம். அத் தகைய நேரங் களில் தானாகவே ட்ரிப் ஆகி மின்சப்ளையை இந்த கருவி தடுத்து நிறுத்தும்.

MCB -க்கு பதிலாக ELCB (Electric Leakage Circuit Breaker) என்ற கருவி வந்தது. தற்போது அதிலும் நவீனமான RCCB (Residual Current Circuit Breaker) கருவி வந்துள்ளது. புதிய வீடு கட்டு மானங்களின் போது இத்தகைய விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை கருவிகளை பொருத்தி மின் விபத்துகளை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT