இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலூர் வடக்கு காவல் நிலையம் அருகே இருந்து தலைமை தபால் நிலையம் வரை மிதிவண்டி பேரணி நடைபெற்றது. படம்: வி.எம்.மணிநாதன். 
Regional02

இந்திய கம்யூ., கட்சியினர் பேரணி :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலூரில் இந்திய கம்யூ., கட்சியினர் மிதி வண்டி பேரணி நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. அதன்படி, வேலூரில் வடக்கு காவல் நிலையம் அருகே இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.லதா தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். மிதிவண்டி பேரணி தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெற்றது.

SCROLL FOR NEXT