செய்யாறு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மரக்கன்று மற்றும் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. 
Regional03

தொழில்நுட்ப கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் 1,800 பனை விதைகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.

75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் சரவணகாந்தி வரவேற்றார்.

மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் ப.இந்திரராஜன் மரக்கன்றுகளை நட்டார். செய்யாறு செஞ்சிலுவை சங்க தலைவர் மாதவன், நிர்வாகிகள் கோவேந்தன், திருஞானசம்பந்தன், சுந்தர், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், துறை தலைவர் கலைமணி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT