இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு பணி தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி, மேல்மொணவூரில் விழா மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா நேற்று பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.படம்: வி.எம்.மணிநாதன். 
Regional03

வேலூருக்கு முதல்வர் ஸ்டாலின் : வருகை தேதியில் மாற்றம்? :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க நவ.2-ல் வருகைதர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் அடுத்த மேல்மொண வூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 220 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டஅடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டும் திட்டப் பணியையும், நலத்திட்ட உதவிகள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 3-ம் தேதி வேலூர் வருகை தர உள்ளார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், முதலமைச்ச ரின் வருகை தேதியில் மாற்றம் செய்து நவம்பர் 2-ம் தேதியன்று நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பணிகள் வேகமெடுத்துள்ளது. விழா நடைபெறும் அரங்கை தயார் செய்யும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல், திட்டப் பணிகள் தொடக்க விழா நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர், ரேஷன் கார்டுகள் வழங்குவது பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘முதலில் நவ.3-ம் தேதி என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்த நிலையில் அதை 2-ம் தேதிக்கு மாற்றும்படி கூறியுள்ளனர்.

எனவே, அதற்கேற்ப பணிகளை செய்து வருகிறோம். நவ.2-ஆம் தேதி நிகழ்ச்சி குறித்தும் உறுதியாகவில்லை. ஆனால் நவ.2-ம் தேதியன்று நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT