Regional02

சம்பள நிலுவை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம்தூய்மை பணியாளர்கள் புகார் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சி அம்பேத்கர் எஸ்.சி. எஸ்.டி. தனியார் ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சங்கம் சார்பில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர்சு.வினீத்திடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில், தூய்மைப் பணியாளர்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

பண்டிகை காலங்களில் நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் உதவிகூட எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. தீபாவளி பண்டிகையால் அதிகளவு பட்டாசு போன்ற வெடிபொருட்களால் ஏற்படும் கழிவுகள்அதிகமாக வரும். எனவே உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு, போனஸ் மற்றும் 2 மாத ஊதிய நிலுவைத் தொகையை காலதாமதமின்றி வழங்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT