திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சங்கத்தினர். 
Regional01

ஊரக வளர்ச்சி பணியாளர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடந்த இப்போராட்டத்துக்கு மண்டல தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு கடிதங்களை அனுப்பினர்.

விருதுநகர்

விருதுநகரில் தலைமை அஞ்சலகம் முன் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கற்குவேல் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்டப் பொருளாளர் அருணாசலம், மாவட்டச் செயலர் கண்ணன் உட்பட சுமார் 1,800-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT