Regional02

லஞ்ச ஒழிப்பு சோதனை : இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1.53 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கருப்பசாமி. இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனாம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து, வச்சக்காரப்பட்டி காந்தி நகர் அருகே உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.1.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT