சிவகங்கை தாலுகா இன்ஸ் பெக்டர் முத்துமீனாட்சி தலைமை யில் போலீஸார் சிவகங்கை அருகே பில்லூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா, 2 அரிவாள்கள் வைத்திருந்த இருவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அவர்கள் சிவகங்கை அருகே அழுபிள்ளைதாங்கியைச் சேர்ந்த அசோக்(24), முத்துக்கண்ணு(25) என்பது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை சிவகங்கையில் விற்பதற்காக வைத்திருந்தனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, 2 அரிவாள்கள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். சிவ கங்கை தாலுகா போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.