அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபருக்கு சிறந்த முதல்வருக்கான விருதை வழங்கிய காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் வசந்தா. 
Regional05

அமெரிக்கன் கல்லூரி முதல்வருக்கு சிறந்த முதல்வருக்கான விருது :

செய்திப்பிரிவு

போதி என்ற ஆய்விதழ் உயர் கல்வித் துறையில் சிறப்பாக செயல்படக்கூடிய கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், ஆய்வு வழிகாட்டிகள், மாணவர்கள் ஆகியோருக்கான பாராட்டு விழாவை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடத்தியது.

விழாவுக்கு அமெரிக்கன் கல்லூரி முதல்வர், செயலர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். காம ராசர் பல்கலைக்கழகப் பதி வாளர் வசந்தா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மதுரைக் கல்லூரி முதல்வர் சுரேஷ், பேராசிரியர் தினகரன் வாழ்த்திப் பேசினர். விழாவில் சிறந்த முதல்வருக்கான விருது அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபருக்கும், சிறந்த கல்வியாளருக்கான விருது மதுரைக் கல்லூரி பேராசிரியர் தீனதயாளனுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் வெவ்வேறு சாதனை புரிந்த 45 பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் தங்களது துறைக்கான சிறந்த விருதினை பெற்றனர். பேராசிரியர் கவியரசு நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT