கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள மங்கனூரைச் சேர்ந்த கோபால் மகன் கல்வராயன் (32). இவர் நேற்று முன்தினம் விமானம் மூலம் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருந்தார். அவரது ஆவணங்களை விமானநிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு தீரனூரைச் சேர்ந்த கண்ணன் மகன் ராஜா என்ற பெயரில் போலியாக பாஸ்போர்ட் பெற்று, அதன்மூலம் துபாய் செல்ல இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விமானநிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கல்வராயனைக் கைது செய்தனர்.