Regional01

நலத்திட்ட உதவிகள் வழங்கல் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து 276 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மாவட்ட காவல்கண் காணிப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, தனுஷ் எம்.குமார் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT