Regional01

கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் முறைகேடாக பணம் பறிமாறப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

திருநெல்வேலியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மாலையில் கடையம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்களின் மேஜைகள் மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத பணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT