Regional01

இளைஞரிடம் ரூ.12.50 லட்சம் துணிகர மோசடி :

செய்திப்பிரிவு

மதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் மகேசுவரன் (30). இவரிடம், வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதிநகரைச் சேர்ந்த சந்திரன், இவரது மகன் பிரேம் குமார் மற்றும் பிரதீப், ஜெயந்தி ஆகியோர் கடந்த ஆகஸ்டு மாதம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளனர்.

இருப்பினும் அவர்கள் அரசு வேலை வாங்கித் தர முயற்சிக்கவில்லை. கொடுத்த பணத்தையும் அவர்கள் திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக மதுரை அண்ணா நகர் போலீசில் மகேசுவரன் அளித்த புகாரின்பேரில் சந்திரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT