Regional03

இணை இயக்குநர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை :

செய்திப்பிரிவு

வேலூர் தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் வள்ளலார் பகுதியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், பணம் மற்றும் பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. ஆவணங்கள் சிலவற்றை மட்டும் பறிமுதல் செய்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனை குறித்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் தரப்பில் விசாரித்தபோது ‘‘சோதனை நடத்தவில்லை ஆய்வு மட்டும் நடத்தப்பட்டது’’ என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT