Regional03

ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் தொடக்கம் :

செய்திப்பிரிவு

திருச்சி மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்த பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், மாநகராட்சி அனைத்துக் கோட்ட உதவி வருவாய் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், வருவாய் ஆய்வர்கள் உள்ளிட்டோருக்கு ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்து உதவி ஆணையர் ச.நா.சண்முகம் மற்றும் பயிற்றுநர்கள் பயிற்சியளித்தனர்.

SCROLL FOR NEXT