Regional05

31 மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடுபோயின.

இது தொடர்பாக எஸ்.பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், புதுக்கோட்டை நகரக் காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் சந்தேகப்படும் வகையில் நின்ற கொத்தமங்கலம் கூனரி தெருவைச் சேர்ந்த கதிர்வேலு மகன் கண்ணன்(42) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவர் திருடி விற்ற 31 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT