Regional05

பல் மருத்துவர் தற்கொலை :

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் கோபிகண்ணன் (26). பல் மருத்துவம் படித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கோபிகண்ணனின் செல்போன் இருப்பிடத்தை பார்த்ததில் திருச்செந்தூர் டி.பி.சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை காட்டியுள்ளது. அந்த விடுதியில் விசாரித்த போது அங்கு அவர் அறை எடுத்தது தெரியவந்தது. அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்ததாக திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT