திருவண்ணாமலையில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய கல்வி மாவட்ட அலுவலர் ஆரோக்கியசாமி. 
Regional03

திருவண்ணாமலை கல்வி மாவட்ட - மாணவர்களுக்கு கலைத்திருவிழா :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான கலா உத்சவ்-2021 என்ற கலைத்திருவிழா நடைபெற்றது.

கல்வி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 78 பள்ளிகளில் இருந்து சுமார் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், செவ்வியல் நடனம், பாரம்பரிய நடனம், ஓவியம், முப்பரிமாண சிற்பங்கள், காண்கலை, இசைக்கருவி வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு கல்வி மாவட்ட அலுவலர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி மாவட்ட அலுவலர் ஆரோக்கியசாமி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்டப் பொறுப்பாளர் சந்திரசேகரன், வேலாயுதம், சுமித்ரா, ரேவதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT