Regional02

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் சார்பில் - மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி,கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவத்துறை சார்பில், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இணைந்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளஞ்சிவப்பு நிற பலூன்களை வானில் பறக்க விட்டனர். நடப்பு மாதம் முழுவதும் ஜி.கே.என்.எம் மருத்துவமனை வளாகம் மற்றும் கிராமப் புறப்பகுதிகளில் பெண்களுக்கு மார்பக இலவச பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

மேலும், பல்வேறு முன்னணி நிறுவனங்களில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

SCROLL FOR NEXT