Regional02

சிசிடிவி கேமராக்கள் திறப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி போல்டன்புரம் 2-வது தெரு சந்திப்பு பகுதியில், மாநகர கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில், புதிதாக 4 சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார். நகர டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர்கள் சுனைமுருகன், சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கார்த்தி மக்கள் நல மன்ற மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT