Regional01

விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புஉத்தரவு வழங்கல் :

செய்திப்பிரிவு

தமிழக அரசின் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை பெரம்பலூரில் எம்எல்ஏ ம.பிரபாகரன் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய், செயற்பொறியாளர் (பொது) சேகர், உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்செல்வன் (நகரம்), சுப்பிரமணியன், செல்வராஜ், கலியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT