Regional01

மண்ணச்சநல்லூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ சீ.கதிரவன் : அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ சீ.கதிரவன் நேற்று 85.சீதேவிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு ஆங்காங்கே கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, சீ.கதிரவன் பேசும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 10 பேருக்குள் ஒருவராக என்னை இடம் பெறச் செய்ததற்கு நன்றி. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

சில மாதங்களுக்குள், இத்தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்’’ என்றார்.

திமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசபெருமாள், ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.பி. இளங்கோவன் (மண்ணச்சநல்லூர் கிழக்கு), செந்தில்குமார் (மண்ணச்சநல்லூர் மேற்கு), காட்டுக்குளம் கணேசன் (முசிறி கிழக்கு), ராமச்சந்திரன் (முசிறி மேற்கு), சேகரன் (தாத்தையங்கார்பேட்டை), மண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் தர், துணைத் தலைவர் கே.பி.ஏ.செந்தில், முசிறி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ரமேஷ், மாவட்டக் கவுன்சிலர் வளர்மதி, ஒன்றிய கவுன்சிலர் ராஜ்மோகன், நகரச் செயலாளர்கள் சிவசண்முககுமார் (மண்ணச்சநல்லூர்), துரை.ராஜசேகரன் (சமயபுரம்), முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், 85. சீதேவிமங்கலம் ஊராட்சித் தலைவர் கதிரேசன், கூத்தூர் ஊராட்சித் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

SCROLL FOR NEXT