Regional01

உதவி ஆய்வாளர் தற்கொலை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி சந்திப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனி (55). இவர், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி கரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனால் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் இருந்த பழனி, விஷம் குடித்து மயங்கி விழுந்து ள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT