ஆழ்வார்திருநகரி அருகே தாமிரபரணி ஆற்றில் சிக்கிய மூதாட்டி முத்தம்மாளை காவலர் சதீஷ் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டு வந்தனர். 
Regional02

தாமிரபரணியில் சிக்கிய மூதாட்டி மீட்பு :

செய்திப்பிரிவு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக கடந்த சிலநாட்களாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவு வந்து கொண்டுள்ளது. ஆழ்வார்திருநகரி அருகே மாடகோவில் தெருவைச் சேர்ந்த முத்தம்மாள் (80) என்பவர், நேற்று சிவராமமங்கலம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் விறகு வெட்ட சென்றுள்ளார். அப்போது தாமிரபரணி ஆற்று தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதை பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள், உடனடியாக ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காவலர் சதீஷ், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துவிட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டார். தீயணைப்புத்துறை வீரர்களும்,காவலர் சதீஷுடன் இணைந்து மூதாட்டி முத்தம்மாளை மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர் சதீஷ் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT