Regional04

மங்கலம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீதம் போனஸ் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்குவது குறித்த பேச்சு வார்த்தை சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.உற்பத்தியாளர்கள் தரப்பில் மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.மருதாசலமூர்த்தி தலைமை வகித்தார். தொழிற்சங்கத்தினர் தரப்பில் மங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.சுப்ரமணியம் தலைமை வகித்தார். இதில், 2020-21-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக தொழிலாளர்களின் ஆண்டு வருமானத்தில் 13.16 சதவீதம் வழங்குவது என ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.5 சதவீதம் போனஸ் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

SCROLL FOR NEXT