Regional04

விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன் : கிருஷ்ணகிரி ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள் மூலமாக தகுதியுள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 5825 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.30.46 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அளித்து உறுப்பினராகவும் சேர்ந்து கொள்ளலாம். மேலும், உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயன் பெறலாம்.

SCROLL FOR NEXT