Regional02

பண்ருட்டியில் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய கால அவகாசம், மாற்று இடம் வழங்கிடுக :

செய்திப்பிரிவு

பண்ருட்டி புதுநகர் களத்துமேடு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி யரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்," பண் ருட்டி நகராட்சிக்குட்பட்ட 28- வது வார்டில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

கூலிவேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதி ஏரி இடம். 14 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது.

எங்கள் பகுதியில் சாலை, தெரு விளக்கு, மின் இணைப்பு, குடிநீர் என அனைத்து வசதிகளும் நகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது எங்கள் பகுதி முழுவதும் சின்ன ஏரி இடம் என கூறுகின்றனர்.

நாங்கள் குடியிருக்கும் இடம் வழியாக எந்த வாய்க்காலும் இல்லை, விளை நிலங்களும் இல்லை.

எனவே நகரத்திற்குள் நாங்கள் வசிக்க மனைப்பட்டாவுடன் மாற்றும் இடமும், வீட்டை காலி செய்ய கால அவகாசமும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT