Regional01

பாஸ்போர்ட் வழக்கில் இலங்கை தமிழர் கைது :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் புதிய இ.பி காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(52). இலங்கையைச் சேர்ந்த இவர் கடந்த 1975-ம் ஆண்டு இந்தியா வந்து, திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.

2011-ம் ஆண்டில் இந்திய ஆவணங்களைப் பெற்று, அதன்மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இந்த சூழலில் நேற்று திருச்சியிலிருந்து நேற்று இலங்கைக்கு விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்தபோது சிவக்குமாரின் ஆவணங்களை விமானநிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில் போலி சான்றுகள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, அதன்மூலம் வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்ததால் இதுகுறித்து விமானநிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT