Regional04

கும்பகோணத்தில் அக்.30-ல் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு :

செய்திப்பிரிவு

கும்பகோணத்தில் அக்.30-ம் தேதி பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு செய்யப்பட உள்ளது.

கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட, பள்ளி வாகனங்கள் அக்.30-ம் தேதி காலை 10 மணிக்கு, கும்பகோணம் அரசு தன்னாட்சி கலை கல்லூரி மைதானத்தில், ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், கோட்டாட்சியர், டிஎஸ்பி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் கும்பகோணம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினரால் கூட் டாய்வு செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வு குறித்த தகவல் கும்பகோணம் வட்டாரப் போக்கு வரத்து அலுவலக எல்லைக் குட்பட்ட அனைத்து பள்ளிக ளுக்கும் அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு, பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.

எனவே, கும்பகோணம் வட்டா ரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி நிறுவனங்கள் தங்களது பள்ளி வாகனங்களை உரிய அசல் ஆவணங்கள், பதிவுச் சான்று, காப்பு சான்று, அனுமதி சீட்டு, வரி மற்றும் பசுமை வரி செலுத்திய ரசீது, புகை சான்று, அசல் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய சீருடையுடன் வாகனங்களை ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறது.

இந்த கூட்டாய்வுக்கு உட்படுத் தப்படாத வாகனங்களின் அனுமதி சீட்டு மற்றும் தகுதிச் சான்றை ரத்து செய்யவோ அல்லது தற்காலிகமாக தடை விதிக்கவோ முன்னறிவிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலு வலர் முக்கண்ணன் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT