Regional04

மன்னார்குடி மீன் சந்தையில் ஆய்வு :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள மீன் சந்தையில் விற்கப்படும் மீன்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மன்னார்குடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். மீன் சந்தையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று, அங்கு விற்கப்படும் மீன்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். மீன் துறை ஆய்வாளர் மனுநீதிச்சோழன், மன்னார்குடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கே.முருகேசன், நீடாமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT