Regional01

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தென்காசி மாவட்ட கட்டிட கட்டுமானப் பொறியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் முத்துமாரியப்பன் தலைமை வகித்தார்.

அவர் கூறும்போது, “கட்டுமானப் பொருட்களின் விலை தினந்தோறும் உயர்ந்து வருவதால் தொழில் மிகுந்த பாதிப்படைந்து வருகிறது. சாமானிய மக்களின் கனவான வீடு கட்டும் திட்டமும் கேள்விக்குறிகி உள்ளது. சிமென்ட், கம்பி, மின் உபயோக பொருட்கள் மற்றும் கட்டுமானத் துறைக்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான பொருட்களும் கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT