Regional01

நெல்லை அருகே தாழையூத்தில் - பைனான்சியர் கொலை, தம்பி உட்பட 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, தென்றல் நகரைச் சேர்ந்தவர் முருகன் என்ற முருகானந்தம் (48). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயா நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றிருந்தார். வீட்டில் முருகானந்தம் மட்டும் இருந்தார். ஜெயா வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, முருகானந்தம் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முருகானந்தத்தின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடரபாக போலீஸார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சினை தொடர்பாக முருகானந்தத்தை அவரது தம்பி கிருஷ்ணபெருமாள் (43) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலை தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்ட மணிகண்டன் என்பவர் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT