தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ் பேசினார். படம்: என்.ராஜேஷ் 
Regional02

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை :

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முன்னேற்பாட்டு பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கோ.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழையின் போது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். மக்கள் வசிக்கும்பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழையின் போது மக்களுக்குபாதிப்புகள் ஏற்படாமல்இருக்கும் வகையில், அனைத்து முன்னேற்பாடு களையும் செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT