கணேசன் 
Regional02

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு :

செய்திப்பிரிவு

காஞ்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ப.கணேசன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த திவாகர்கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்னை கலைவாணர் அங்கத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இப்பணியை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை ராஜாஜி அரங்கத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த ப.கணேசன் காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT