Regional02

திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா திருச்செங்கோட்டில் கலந்தாய்வுக் கூட்டம் :

செய்திப்பிரிவு

திருநங்கைகள் 34 பேருக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திருச்செங் கோடு ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தார். திருநங்கைகள் நல வாரியக்குழு உறுப்பினரான ஒன்றியக் குழு உறுப்பினர் ரியா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி விண்ணப்பித்த 34 திருநங்கைளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

தொடர்ந்து உரிய விசாரணைக்குப் பின்னர் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தா, டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT