Regional02

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

பர்கூர் அருகே மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தார்.

பர்கூர் வட்டம் பையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் (36). இவரது மனைவி மீனா (31). இவர் நேற்று முன்தினம் வீட்டின் தண்ணீர் தேவைக்காக மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பர்கூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT