Regional03

ஏற்காட்டில் 100 மிமீ மழை பதிவு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் அவ்வப்போது மிக கனமழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் 100 மிமீ மழை பதிவானது.

ஏற்காட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மலைப்பாதைகளில் ஆங்காங்கே சிறிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. இது சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஏற்காட்டில் கனமழை பெய்தது. இதனால், மலைப்பாதைகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழையால் சேலத்தையொட்டிய மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கருங்காலி ஓடை, கற்பகம் ஓடை ஆகியவற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனிடையே மழை காரணமாக பயணிகள் வருகை நேற்று குறைந்தது. நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சங்ககிரி 37, பெத்தநாயக்கன்பாளையம் 36, எடப்பாடி 22, மேட்டூர் 18.4, ஓமலூர் 18, காடையாம்பட்டி 4, சேலம் 1.6, ஆத்தூர் 1.0 மிமீ மழை பதிவானது.

SCROLL FOR NEXT