வடலூர் அருகே கருங்குழியில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையம் சார்பில் உயிர் மீட்பு உபகரணங்கள் மூலம் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. 
Regional03

வடலூர் அருகே தீயணைப்புத்துறை சார்பில் - வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பயிற்சி :

செய்திப்பிரிவு

வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் சிறப்பு உயிர் மீட்பு உபகரணங்கள் மூலம் செயல் விளக்கப் பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிசுபமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு நிலை அலுவலர்கள் வேல்முருகன், சிவக்கொழுந்து உட்பட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதே கிராமத்தில் உள்ள கல்லாண்குளத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து சிறப்பு உயிர் மீட்பு உபகரணங்கள் மூலம் செயல் விளக்க பயிற்சியை அளித்தனர்.

SCROLL FOR NEXT