தமிழக அரசு வருகிற 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதையொட்டி பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் தன்னார்வலர்களும் பங்கேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று கடலூர் புதுப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி, கிளீன் கடலூர் ஆகியவை இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதை பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள செடி, கொடிகள், முட்புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன. குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை டாக்டர் வினோத், நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.