அன்னதானத்தை தொடங்கிவைத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம். அருகில் முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா, மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன். 
Regional02

மயூரநாத சுவாமி, பாம்பன் மத் குமரகுருதாச சுவாமிகள் ஆலய கும்பாபிஷேக விழா :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியைச் சேர்ந்த தென்னம் பிள்ளை வலசை கிராமத்தில்  மயூரநாத சுவாமி மற்றும் பாம்பன் மத் குமரகுருதாச சுவாமிகள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபி ஷேக விழா நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனைகள் ஓம் தேசிய பசுமை இயக்க நிறுவனர் தவத்திரு வைத்தியலிங்க சுவாமி என்ற பசுமை சித்தர் தலைமையில் நடந்தது. அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ.அன்வர் ராஜா ஆலய வளாகத்தில் உள்ள என்ஆர் செல்வராணி அரங்கத்தை திறந்துவைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், அதிமுக மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ. முனியசாமி, தேசிய கயிறு வாரியத் தலைவர் து.குப்புராமு, மண்டபம் ஒன்றியக் கவுன்சிலர் மருதுபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். ஆலய நிறுவனர்கள் ரெத்னா பில்டர்ஸ் என்.ரத்தினம், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் என்.ஆர்.பால்பாண்டி யன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

SCROLL FOR NEXT