Regional01

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களில் 78 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் 78 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 22, 23-ம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரு நாள் முகாம் முடிவில், மாவட்ட அளவில் 78 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 64 மையங்கள் மற்றும் 40 நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.

இதில், 20 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் முதல் தடுப்பூசி போட்டு, இரண்டாவது தடுப்பூசி உரிய நேரத்தில் போடாத 20 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி சார்பில் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 10 ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

நடமாடும் வாகனங்கள் மூலம் 8 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் முதல் நாளில் 9,300 பேரும், இரண்டாவது நாளில் 11, 300 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT