Regional02

இருசக்கர வாகனம் திருடிய இரு இளைஞர்கள் கைது :

செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் திருடிய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம் அடுத்த புலியானியூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). கூலித் தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (25), அகேஷ் (19) ஆகியோர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT