மாணவி தங்கம் ரூபினி. 
Regional03

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு அரசுப் பள்ளி மாணவிக்கு தங்கம் :

செய்திப்பிரிவு

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

தமிழ்நாடு அக்வாடிக் அசோசியேஷன் சார்பில் 47-வது மாநில அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 600 பேர் கலந்து கொண்டனர். நீச்சலில் டைவிங், பட்டர்பிளை, பிரஸ்ட் ஸ்டாக், பேக்ஸ்டாக் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

இதில், டைவிங் பிரிவில் 17 வயதுக்குட்பட்டவர் களுக்கான போட்டியில், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கம் ரூபினி முதலிடம் பெற்று தங்கம் வென்றார். அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மாணவி தங்கம் ரூபினி தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT